Trace Id is missing
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல்
உள்நுழை

Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு

Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 7 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

  • பதிப்பு:

    1.0

    வெளியிடப்பட்ட தேதி:

    31/8/2010

    கோப்பு பெயர்:

    LIP_ta-IN-32bit.mlc

    LIP_ta-IN-64bit.mlc

    கோப்பின் அளவு:

    3.0 MB

    4.8 MB

    Windows மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) Windows -இன் அதிகப் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளின், பகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தொகுப்பை வழங்குகிறது. LIP -ஐ நிறுவியப் பிறகு, வழிகாட்டிகளில் உரை, உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், மற்றும் உதவி மற்றும் ஆதரவு தலைப்புகள் ஆகியவை LIP மொழியில் காட்சியளிக்கும். மொழிபெயர்க்கப்படாத உரை Windows 7 -இன் அடிப்படை மொழியில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 7 -இன் ஸ்பானிஷ் பதிப்பை வாங்கியிருந்தால், மற்றும் ஒரு கேட்டலன் LIP -ஐ நிறுவியிருந்தால், சில உரை ஸ்பானிஷில் எஞ்சியிருக்கும். ஒரு ஒற்றை அடிப்படை மொழியில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட LIP -ஐ நிறுவ முடியும். Windows LIP -க்கள் அனைத்து Windows 7 பதிப்புகளையும் நிறுவ முடியும்.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows 7

    • Microsoft Windows 7
    • Windows 7 -இன் தேவைப்படும் அடிப்படை மொழியின் நிறுவல்: ஆங்கிலம்
    • பதிவிறக்கத்திற்காக 4.63 Mb காலியிடம்
    • அமைவிற்காக 15 Mb காலியிடம்
  • எச்சரிக்கை: உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால், LIP -ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panel -ஐ திறந்து, System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.

    Windows 7 LIP -இன் 32-பிட் மற்றும் 64-பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால், பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன், Windows 7 -இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்: Windows 7-இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை, பின்வருமாறு தீர்மானிக்கலாம்:

    Start பொத்தானைக் கிளிக் செய்தபின், கணினி என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணினி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
    அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32-பிட் இயக்க முறைமையா அல்லது, அது 64-பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும்.

    32-பிட் பதிப்பை நிறுவ, நீங்கள் இவற்றை செய்யலாம்:

    1. தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும்


    2. அல்லது
    3. தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்
      • கோப்பை உங்கள் கணினிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்,
      • LIP -ஐ நிறுவ, பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று, அதை இருகிளிக் செய்யவும்

    64-பிட் பதிப்பை நிறுவ, மேலே உள்ள 2 வது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.