ஓட்டுநர்கள் தங்கள் கணக்குகளுக்கான அணுகலை ஏன் இழக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுதல்
இந்தப் பக்கத்தில், ஓட்டுநர்கள் தங்கள் கணக்குகளுக்கான அணுகலை இழக்கக்கூடிய பொதுவான காரணங்கள், அதைத் தவிர்ப்பது எப்படி, அந்தச் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்த தகவல்களைக் காணலாம்.
ஓட்டுநர்களுக்கான எங்கள் பொறுப்பு
Uber இயங்குதளத்தை அணுகக்கூடிய வகையில் வைத்திருப்பதற்கும், ஓட்டுநர்கள் வேலை செய்ய விரும்பும் போதெல்லாம் ஆன்லைனில் வருவதற்கு உதவுவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கணக்கு அணுகலை இழப்பது என்பது பெரும்பாலும் நடக்காது, ஆனால் அது நிகழும்போது, இது ஏமாற்றமளிக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.
எங்கள் செயல்முறைகள் நியாயமானவை, துல்லியம ானவை, மேலும் நாங்கள் சரியானதைச் செய்கிறோம் என்பதை எங்கள் ஓட்டுநர்கள் நம்புவதை உறுதிப்படுத்துவது எங்களது கடமை. அதனால்தான் எங்களுக்கு வழிகாட்ட பின்வரும் கொள்கைகளை உருவாக்கியுள்ளோம்:
ஓட்டுநர்கள் தங்கள் கணக்கு அணுகலுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் நடத்தைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
பல ஆண்டுகளாகத் தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் Uber உடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளனர். தீவிரமான சம்பவங்களைத் தவிர்த்து, அணுகல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது, ஒருவர் எவ்வளவு காலம் இயங்குதளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், எவ்வளவு பயணங்களை முடித்திருக்கிறார் என்பதையும் Uber கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
ஏதேனும் அணுகல் இழப்பு ஏற்பட்டால், முடிவின் பின்னணியில் இருக்கும் காரணங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும், பரிவுணர்வுடனும், எங்கள் தக வல்தொடர்புகளில் சீராகவும் மற்றும் குறிப்பிடத்தக்கதாகவும், வெளிப்படையாகவும் இருக்க Uber எல்லா முயற்சிகளையும் எடுக்கும். இருப்பினும், இந்த விவரங்களைப் பகிர்வது மற்ற பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றால், சில தகவல்களை வழங்காமலும் இருக்கக்கூடும்.
மிகவும் தீவிரமான நிகழ்வுகளைத் தவிர, 7 நாட்களுக்கு மேல் அணுகலை அகற்றும் மற்றும் தாங்களாகவே தீர்க்க முடியாத எந்தவொரு முடிவையும் மதிப்பாய்வு செய்யக் கோரும் திறன் ஓட்டுநர்களுக்கு இருக்க வேண்டும்.
கணக்கைச் செயலிழக்கச் செய்தல் மற்றும் மதிப்பாய்வுத் தரநிலைகளை உருவாக்குதல், மதிப்பாய்வு செய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் Uber ஒரு நிலையான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.
எங்கள் கணக்கு மதிப்பாய்வு செயல்முறை
மனித ஈடுபாடு
Uber இயங்குதளத்தின் பாதுகாப்பையும் ஆபத்தின்மையையும் மேம்படுத்துவதற்கு தரவு மற்றும் தொழில்நுட்பம் பயனுள்ள கருவிகளாக இருந்தாலும், ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி செய்பவர்கள் நியாயமாக நடத்தப்படுவதையும், மோசடி அறிக்கைகளால் அவர்களின் கணக்குகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதில் கைமுறை மதிப்பாய்வுகள் எப்போதும் ஒரு பங்கைக் கொண்டிருக்கும்.
முன்கூட்டிய அறிவிப்பு
முடிந்தபோதெல்லாம் ஓட்டுநர் தனது கணக்கிற்கான அணுகலை இழக்கும் அபாயம் இருந்தால், எச்சரிக்கைச் செய்திகள் வடிவில் நாங்கள் அவர்களுக்குத் அதைத் தெரிவிக்க முயற்சிப்போம். இருப்பினும், சட்ட அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக, முன் எச்சரிக்கை இன்றி அணுகலை நாங்கள் அகற்ற வேண்டிய சூழ்நிலைகளும் வரலாம்.
கூடு தல் தகவல்களை வழங்குவதற்கான வாய்ப்பு
கணக்கு செயலிழப்பு குறித்த மதிப்பாய்வைக் கோரவும், ஆடியோ அல்லது வீடியோ ரெக்கார்டிங்குகள் போன்ற தங்கள் வழக்கை ஆதரிக்கக் கூடுதல் தகவல்களை வழங்கவும் ஓட்டுநர்களுக்கு திறன் இருக்க வேண்டும். அதனால்தான் ஆப்-இல் மதிப்பாய்வு மையத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இதில் ஓட்டுநர்கள் தங்கள் கணக்கு முடக்கப்படுதல் குறித்து மேல்முறையீடு செய்யலாம்.
தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பு
பெரும்பாலும் பணத்தைத் திரும்பப் பெறும் நோக்கத்துடன் எங்கள் தரமதிப்பீடுகள் அல்லது வாடிக்கையாளர் ஆதரவு அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்யும் பயணிகளை அடையாளம் காணும் செயல்முறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம், இந்த வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டுகள் கணக்கு செயலிழப்பு முடிவுகளில் கருதப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் உதவுகிறோம்.
அணுகலை இழப்பது ஏன் நிகழ்கிறது, என்ன செய்ய வேண்டும்
ஓட்டுநர் தனது கணக்கிற்கான அணுகலை இழக்கக்கூடிய காரணங்களில் காலாவதியான ஆவணங்கள் அல்லது அவரது பேக்ரௌண்ட் சரிபார்ப்பில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அடங்கும்.
சில நேரங்களில், சில தரச் சிக்கல்கள் காரணமாக ஓட்டுநர்கள் தங்கள் கணக்குகளுக்கான அணுகலை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இழக்க நேரிடும், எடுத்துக்காட்டாக, வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்துக் கட்டணங்கள் ஏற்பட்டால், பயணங்களை ரத்து செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் மற்றும் பயணத்தை Uber ஆப்-இல் இருந்து நீக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அல்லது Uber ஆப்-இல் காட்டப்பட்டுள்ள கட்டணத்திற்கு வெளியே பணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அல்லது கூடுதல் பணத்தைக் கேட்டால். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களை ஓட்டுநர் ஆப்-இல் இருந்து வெளியேறுவதற்கு முன்பு பல முறை நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கையை வழங்குவோம்.
கணக்கைச் செயலிழக்கச் செய்வதை மதிப்பாய்வு செய்யக் கோருவதற்கும், தங்கள் வழக்கை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை வழங்குவதற்கும் ஓட்டுநர்களுக்குத் திறன் இருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் ஆப்-இல் மதிப்பாய்வு மையத்தை உருவாக்கி, அதை உலகெங்கிலும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம்.
குறுகிய காலத்திற்குக் கூட அணுகலை இழப்பது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும், எனவே ஒவ்வொரு அறிக்கையும் நியாயமாகவும் உடனடியாகவும் மதிப்பாய்வு செய்யப்படுவதை உறுதிசெய்கிறோம். கணக்கு அணுகலை மீண்டும் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருந்தால், ஓட்டுநருக்கு நாங்கள் அனுப்பும் செய்தியில் அவற்றைச் சேர்ப்போம். உதவிக்கு Uber-இன் வாடிக்கையாளர் சேவைக் குழுவை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.
ஓட்டுநர்கள் கணக்கு அணுகலை இழக்கக்கூடிய காரணங்கள் குறித்து கீழே மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
- பேக்ரௌண்ட் சரிபார்ப்புகள்
அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் மோட்டார் வாகனப் பதிவுகளையும் குற்றவியல் வரலாற்றையும் மதிப்பீடு செய்வது உள்ளிட்ட வழக்கமான பேக்ரௌண்ட் பரிசோதனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். சரியான தகுதி அளவுகோல்கள் அவர்கள் எங்கு பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது மற்றும் பெரும்பாலும் அவர்களின் நகரம் அல்லது மாநிலத்தில் பொருந்தும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. பேக்ரௌண்ட் சரிபார்ப்புகளின் அடிப்படையில் அணுகலை இழப்பதற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை/மரணம் விளைவிக்கும் குற்றம், பயங்கரவாதம், ஆள் கடத்தல் மற்றும் ஆட்களை விற்பனை செய்தல் உள்ளிட்டசமீபத்திய கடுமையான குற்றங்கள்
- இன்னும் நிலுவையில் உள்ள ஏதேனும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள்
- கடந்த 3 ஆண்டுகளில் பல போக்குவரத்து மீறல்கள் அல்லது விபத்துக்கள்
- கடந்த 3 ஆண்டுகளில் தற்காலிகமாக நீக்கப்பட்ட உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல்
- குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் அல்லது பிறர் மீது வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றது போன்ற சமீபத்திய தீவிரமான ஓட்டுநர் விதி மீறல்கள்
உள்ளூரின் பொருந்தக்கூடிய விதிமுறைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப் பொறுத்து, பேக்ரௌண்ட் சரிபார்ப்புகளில், 18 வயதில் தொடங்கி ஓட்டுநரின் முழு வரலாறும் சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்படும்.
- பாதுகாப்பு சிக்கல்கள்
Down Small நிகழ்நேர ID சோதனை தோல்வியடைதல்
எங்கள் பரிசோதனை சரிபார்ப்புகளில் தேர்ச்சி பெற்ற நபரின் அடையாளத்துடன் வாகனம் ஓட்டும் நபர் பொருந்துகிறாரா என்பதை உறுதிப்படுத்த Uber நிகழ்நேர ID சரிபார்ப்பைப் பயன்படுத்துகிறது. நிகழ்நேர புகைப்படம் அவர்களின் சுயவிவரப் படத்துடன் பொருந்த வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஓட்டுநர்கள் தங்கள் கணக்கை வேறு யாரிடமும் பகிரவோ அல்லது வேறு யாரிடமும் ஒப்படைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.நிகழ்நேர ID சரிபார்ப்புடன் செய்யப்படும் வழக்கமான தவறுகளுக்கான எடுத்துக்காட்டுகள்
- கணக்கு உரிமையாளரைத் தவிர வேறு ஒருவரை நிகழ்நேரப் புகைப்படத்தை எடுக்க அனுமதிப்பது
- புகைப்படத்தின் புகைப்படத்தைச் சமர்ப்பிப்பது
- ஆப்-இன் நியமிக்கப்பட்ட சட்டகத்திற்குள் முகம் மற்றும் கழுத்து ஆகியவை சரியாகப் பொருந்துவதோடு நல்ல வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியும்படியான புகைப்படத்தை எடுக்காதது.
- ஓட்டுநரின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், சுயவிவரப் புகைப்படத்தைப் புதுப்பிக்காமல் இருப்பது
புகைப்படச் சரிபார்ப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல்
பயணத்தின் போது ஓட்டுநர் விபத்தை சந்தித்தது அல்லது போக்குவரத்து மீறல் குறித்த புகார்கள் அல்லது ஓட்டுநர் ஆப்-ஐப் பயன்படுத்தும் போது மோசமாக, பாதுகாப்பற்ற முறையில் அல்லது கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டியது பற்றி அடிக்கடி பெறப்படும் புகார்கள் இதில் அடங்கும்.
சோர்வு மற்றும் தூக்கக்கலக்கத்தில் வாகனத்தை ஒட்டுதல்
மது, சட்டவிரோத மருந்துகள் அல்லது மருந்து சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகள் அல்லது ஒரு வாகனத்தை இயக்கும் போது பயன்படுத்தக் கூடாதப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஆகியவற்றின் தாக்கத்தின் கீழ் இருக்கும்போது அல்லது தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டுவது பற்றிய புகார்கள் இதில் அடங்கும். காரில் போதை மருந்துகள் மற்றும்/அல்லது திறந்த மது கன்டெய்னர்கள் இருந்ததற்கான புகார்களும் இதில் அடங்கும். வாகனத்தில் மது அல்லது போதைப்பொருளின் வாசனை இருந்தால்—அது பயணிகள் பயன்படுத்தியதால் ஏற்பட்டிருந்தாலும் கூட—பாதுகாப்பான பயணத்தை பலவீனப்படுத்தும் ஒன்றாகவே கருத்தப்படுகிறது. சட்டப்படி, சாத்தியமான சிக்கல்களை விசாரிக்கும் போது Uber ஒரு ஓட்டுநரின் கணக்கை இடைநிறுத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்படலாம்.
வாக்குவாதங்கள் மற்றும் துன்புறுத்தல்
அச்சுறுத்தும், மோதல் போக்கிலான அல்லது துன்புறுத்தும் நடத்தையை வெளிப்படுத்துதல். இதில் அடங்குபவை:- அவமரியாதையான மொழியைப் பயன்படுத்துதல், சைகைகளைச் செய்தல் அல்லது அவமரியாதையான, அச்சுறுத்தும் அல்லது தகாத செயல்களைச் செய்தல்
- Uber-இன் ஆன்லைன் ஆதரவு அமைப்புகள் அல்லது Uber இயங்குதள அனுபவத்துடன் தொடர்புடைய படங்களை முன் அனுமதி இன்றி பகிர்வது உட்பட, Uber சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் வெளிப்படையான பாலியல் ரீதியான அல்லது உடல் ரீதியான வன்முறையை சித்தரிக்கும் கிராஃபிக் படங்களைப் பகிர்வது
பாலியல் வன்முறை அல்லது துன்புறுத்தல்
Uber-ஐப் பயன்படுத்தும்போது ஓட்டுநர்கள், பயணிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர் உட்பட எவராலும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியான தவறான நடத்தை உள்ளிட்ட எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் அனுமதிக்கப்படாது, மேலும் இது சட்டவிரோதமானதாகவும் இருக்கலாம். பாலியல் வன்கொடுமை என்பது சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் ரீதியான செயலையும் அல்லது பாலியல் ரீதியான முயற்சியையும் குறிக்கிறது. தொடுதல், முத்தமிடுதல் அல்லது உடலுறவு கொள்தல் போன்றவை இதில் அடங்கும். பாலியல் வன்முறை என்பது ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்படும் உடல் ரீதியான தொடர்பு அல்லாத தேவையற்ற பாலியல் அல்லது காதல் நடத்தையை உள்ளடக்கியது. இது ஒருவரை அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நடத்தையாகவும் இருக்கலாம். Uber-இன் "பாலியல் உறவு கூடாது விதியானது", ஓட்டுநர்கள் அல்லது டெலிவரி பணியாளர்கள் மற்றொரு நபரை ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அல்லது அவர்களின் சம்மதம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு இடையே எந்தவொரு பாலியல் தொடர்பையும் கண்டிப்பாகத் தடை செய்கிறது.
தவறான ஓட்டுநர்
உங்களுக்குச் சொந்தமில்லாத கணக்கிலிருந்து வாகனம் ஓட்டுகிறீர்கள் அல்லது உங்கள் சுயவிவரத்திலிருந்து வேறு யாரையாவது வாகனம் ஓட்ட அனுமதிக்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கிற்கான அணுகலை இழக்க நேரிடும். இது பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் செய்யப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பயணிகள் புகார் அளிக்கலாம், மேலும் இது கணக்கு அணுகலை இழக்க வழிவகுக்கும்.
அங்கீகரிக்கப்படாத வாகனங்களின்பயன்பாடு
ஓட்டுநரின் சுயவிவரத்துடன் தொடர்புடைய மற்றும் அவர்களின் நகரத்தின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாகனங்கள் அல்லது பிற போக்குவரத்து முறைகள் மட்டுமே ஏற்கத்தக்கவை.அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாகப் பொதுவாக மேற்கொள்ளப்படும் தவறான வழிமுறைகளுக்கான எடுத்துக்காட்டுகள்
- புதுப்பிக்கப்பட்ட வாகனத் தகவலை Uber-க்கு வழங்காமல் இருப்பது
வாகனத் தேவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்
பாதுகாப்பற்ற வாகனங்கள்
தொழில்துறைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தரநிலைகளின்படி வாகனத்தைப் பராமரிக்காதது இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, பிரேக்குகள், சீட் பெல்ட்கள் மற்றும் டயர்களை நல்ல இயக்க நிலையில் வைக்காமல் இருப்பது; நினைவூட்டல்களைப் புறக்கணிப்பது; டாஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகளைப் புறக்கணிப்பது. - மோசடி நடவடிக்கைகள்
Down Small எங்களது இயங்குதளம் முடிந்தவரை சரியாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட, எங்கள் விதிமுறைகளுக்கு இணங்கி நடத்தல், மோசடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருத்தல் போன்றவற்றை Uber இயங்குதளத்தைப் பயன்படுத்தும் அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். Uber-ஐப் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும் மோசடிகளைத் தடுக்கவும் கண்டறியவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறும் மோசடிச் செயல்பாட்டைக் கண்டறிய, மோசடி நிபுணர்களின் மதிப்புரைகள் உட்பட தானியங்கி மற்றும் கைமுறை அமைப்புகளை Uber நம்பியுள்ளது. சில சந்தர்ப்பங்களில், அத்தகைய செயல்பாடு பயனரின் கணக்கை முடக்கக்கூடும்.
கணக்கைச் செயலிழக்கச் செய்யும் மோசடிச் செயல்களில் பின்வருவன அடங்கும், ஆனால் இவை மட்டும் அல்ல:
- பயணத்தின் நேரம் அல்லது தூரத்தை வேண்டுமென்றே அதிகரித்தல்
- பயனர்களை ரத்து செய்யும்படிச் செய்வது உட்பட, பயணக் கோரிக்கைகளை நிறைவு செய்யும் நோக்கமின்றி அக்செப்ட் செய்தல்
- போலி, நகல் அல்லது முறையற்ற கணக்குகளை உருவாக்குதல்
- ஏற்கனவே கட்டணத்தில் சேர்க்கப்பட்டப் பின் வாடிக்கையாளர்களிடமிருந்து பார்க்கிங் கட்டணங்களைக் கேட்பது போன்ற தேவையற்ற கட்டணங்களைக் கோருதல்
- வேண்டுமென்றே மோசடி அல்லது பொய்யான பயணங்களைக் கோருதல், அக்செப்ட் செய்தல் அல்லது நிறைவு செய்தல்
- டெலிவரிப் பொருளைப் பிக்அப் செய்யாமல் டெலிவரியை முடிக்க கிளெய்ம் செய்தல்
- டெலிவரிப் பொருளைப் பிக்அப் செய்தாலும் அந்தப் பொருளின் அனைத்து அல்லது ஒரு பகுதியை வைத்துக்கொள்ளுதல் மற்றும் முழு ஆர்டரையும் டெலிவரி செய்யாமல் இருத்தல்
- தளம் மற்றும் GPS அமைப்பின் சரியான செயல்பாட்டைத் தடுக்க அல்லது தவிர்க்க அங்கீகரிக்கப்படாத அல்லது மாற்றியமைக்கப்பட்ட சாதனங்கள், ஆப் அல்லது நிரல்களைப் பயன்படுத்துவது உட்பட Uber தளத்தின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்தல் அல்லது கையாளுதல்
- ஊக்கத் தொகைகள் அல்லது பரிந்துரைகள் போன்ற எந்தவொரு திட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அவை வழங்கப்பட்ட நோக்கத்திற்காக அவற்றைப் பயன்படுத்தாதது
- மோசடி அல்லது சட்டவிரோத காரணங்களுக்காகக் கட்டணங்களில் சிக்கலை ஏற்படுத்துதல்
- ஆவணங்களைப் பொய்யாக்குதல்
மோசடி ஆவணங்கள்
மாற்றப்பட்ட அல்லது தவறான ஆவணங்கள் அனுமதிக்கப்படாது.மோசடி ஆவணங்கள் தொடர்பாகப் பொதுவாக மேற்கொள்ளப்படும் தவறான செயல்களின் எடுத்துக்காட்டுகள்
- அசல் ஆவணங்களுக்குப் பதிலாகப் புகைப்பட நகல்கள், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் அல்லது புகைப்படங்களின் புகைப்படங்களைச் சமர்ப்பித்தல்
- ஆவணத்தில் நேரடியாக இயற்பியல் முறையில் அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றங்களைச் செய்வது (குறுக்குவெட்டுக் கோடுகள்/திருந்தங்கள் செய்தல், தேவையற்ற கையெழுத்து மற்றும் பிற மாற்றங்கள் போன்றவை)
- ஆவணங்களின் ஃபோன் ஸ்கிரீன்ஷாட்களைச் சமர்ப்பித்தல்
- முழுமையாகத் தெரியாத மற்றும் தெளிவாக இல்லாத ஆவணத்தைச் சமர்ப்பித்தல்
அடையாள மோசடி
ஓட்டுநர் தகவல்களைப் பொய்யாக்குதல், வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுதல், வேறொருவருடன் கணக்கைப் பகிர்வது, தங்களுக்குச் சொந்தமில்லாத தனிப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல் அல்லது அடையாளச் சரிபார்ப்புச் சோதனைகளைத் தவிர்க்க முயற்சிப்பது ஆகியவை இதில் அடங்கும்.அடையாள மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்படும் பொதுவான தவறான செயல்களுக்கான எடுத்துக்காட்டுகள்
- Uber-இல் சமர்ப்பிக்கப்பட்ட முழு சட்டப் பெயர், பிறந்த தேதி, அடையாள எண் மற்றும் பிற கணக்குத் தகவல்கள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தாமல் இருப்பது
- ஒரு ஓட்டுநர் தங்களை அவர்கள் அல்லாத ஒருவராகப் பிரதிநிதித்துவப்படுத்துவது
- தங்களுக்குச் சொந்தமில்லாத மற்றும் பயன்படுத்த அனுமதிக்கப்படாத ஆவணங்களைச் சமர்ப்பிப்பது
- தங்கள் கணக்கை வேறொருவருடன்பகிர்வது (பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர்கள் தங்கள் கணக்கை வேறொருவருடன் பகிரவோ அல்லது வேறு யாரிடமும் ஒப்படைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை)
மோசடி நகல் கணக்குகள்
முறையற்ற நகல் கணக்குகளை உருவாக்குவது அனுமதிக்கப்படாது. ஓட்டுநரின் கணக்கில் உள்நுழைவதில் அல்லது தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால், அவர்கள் நகல் கணக்கை உருவாக்குவதற்குப் பதிலாக ஆதரவு மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
நிதி மோசடி
மோசடி நிதிச் செயல்பாட்டில், வேண்டுமென்றே ஒரு பயணத்தின் நேரம் அல்லது தூரத்தை முறையற்ற விதத்தில் அதிகரிப்பது அல்லது கட்டணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை துஷ்பிரயோகம் செய்வது ஆகியவை அடங்கும், ஆனால் இவை மட்டும் அல்ல.நிதி மோசடி தொடர்பாகப் பொதுவாக மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கான எடுத்துக்காட்டுகள்
- பயணிகளைப் பயணத்தை ரத்துசெய்யச் செய்வது
- பயணத்தின் நேரம் அல்லது தூரத்தைவேண்டுமென்றே அதிகரிப்பது
- கட்டணம் அல்லது பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான தவறான கிளெய்ம்களைச் சமர்ப்பித்தல் அல்லது சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளைத் துஷ்பிரயோகம் செய்தல்
- ஆப்-இல் மற்றும் ஆஃப்லைனில் பயணத்தை ரத்து செய்வது (ஓட்டுநர்களுக்கு ரொக்கமாகச் செலுத்துதல்) போன்ற Uber-இன் சமூக வழிகாட்டுதல்களுக்கு முரணான விஷயங்களைச் செய்யுமாறு ஓட்டுநரிடம் கேட்கும் பயணிகளுடன் ஒத்துழைப்பது
- பாகுபாடு அல்லது சேவையை மறுத்தல்
Down Small ஓட்டுநர் தனது கணக்கிற்கான அணுகலை இழக்க நேரிடுவதற்கான காரணங்கள்:
- இனம், நிறம், உடல் குறைபாடு, பாலின அடையாளம், திருமண நிலை, கர்ப்பம், தேசிய தோற்றம், வயது, மதம், பாலினம், பாலியல் நோக்குநிலை அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிற பண்புகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல் அல்லது புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுதல்
- சக்கர நாற்காலிகள் அல்லது உதவிக்கான பிற சாதனங்களின் காரணமாகப் பயணிகளுக்கான பயணங்களை நிராகரித்தல் அல்லது ரத்துசெய்தல்
பாகுபாடு தொடர்பாகப் பொதுவாக மேற்கொள்ளப்படும் தவறான வழிமுறைகளுக்கான எடுத்துக்காட்டுகள்
- காரில் வாக்கர்கள் போன்ற சக்கர நாற்காலிகள் அல்லது பிற உதவிக்கான சாதனங்களைப் பொருத்த உதவ மறுப்பது. இந்தச் சாதனங்கள் பெரும்பாலும் டிரங்கில் பொருத்தப்படும் வகையில் மடிக்கப்படலாம் அல்லது பிரிக்கப்படலாம்.
- இனம், நிறம், உடல் குறைபாடு, பாலின அடையாளம், திருமண நிலை, கர்ப்பம், சொந்த தேசம், வயது, மதம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை போன்ற ஒருவரின் தனிப்பட்ட பண்புகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தல்.
- தரமதிப்பீடுகள்
Down Small ஓட்டுநர் தனது நகரத்தில் குறைந்தபட்ச சராசரித் தரமதிப்பீட்டை விடக் குறைவான தரமதிப்பீடுகளுக்கு Uber தளத்தின் ஒரு பகுதி அல்லது அனைத்துக்குமான அணுகலை இழக்க நேரிடலாம். அவர்களின் தரமதிப்பீடு குறைந்தபட்ச வரம்பை நெருங்கினால், பயணிகளிடமிருந்து பெற்ற அவர்களின் தரமதிப்பீட்டை மேம்படுத்த உதவும் தகவலை அவர்களுக்குத் தெரிவிப்போம்.
ஓட்டுனர்களுக்கான ஆதார வளங்கள்
பயணிகளின் கடைசி 500 தரமதிப்பீடுகளின் சராசரியே ஓட்டுநரின் தரமதிப்பீடுகளாகும். ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன, அவை அவர்களின் தரமதிப்பீட்டை பாதிக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதிகப்படியான எதிர்மறை அல்லது பக்கச்சார்பான பயணிகளால் வழங்கப்படும் தரமதிப்பீடுகளையும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பின்னூட்டங்களைக் கொண்ட தரமதிப்பீடுகளையும் விலக்குவதற்கான ஒரு முறையை நாங்கள் அமைத்துள்ளோம். இங்கே மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.பயணிகளிடமிருந்து குறைந்த தரமதிப்பீடுகளை ஓட்டுநர்கள் எவ்வாறு தவிர்க்கலாம்
வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முடிப்பதன் மூலம் ஓட்டுநர்கள் பயணம் செய்வதற்கான அணுகலை எவ்வாறு மீண்டும் பெற முடியும் - பிற Uber பயனர்களுக்கான சமூக வழிகாட்டுதல்கள்
Down Small ஓட்டுநர்கள் தங்கள் கணக்கிற்கான அணுகலை இழக்கக்கூடிய பொதுவான காரணங்களை இந்தப் பக்கம் எடுத்துரைக்கிறது. தளத்தின் அனைத்து பயனர்களும் (பயணிகள் உட்பட) இதே போன்ற காரணங்களுக்காக அணுகலை இழக்கலாம். அனைத்து பயனர்களுக்குமான கணக்கு அணுகல் இழப்பு குறித்த கூடுதல் தகவலுக்கு எங்கள் சமூக வழிகாட்டல்களைப் பாருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- நான் ஒரு கணக்கு மதிப்பாய்வைக் கோருவது எப்படி?
Down Small இயங்குதளத்தில் இருந்து நீங்கள் நிராகரிக்கப்பட்டால், எப்போதும் செயலில் உள்ள "மதிப்பாய்வு மையம்" அம்சம் ஆப்-இல் உள்ளது. நீங்கள் மதிப்பாய்வைக் கோரத் தேர்வுசெய்து, வீடியோ மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொடர்புடைய துணைத் தகவல்களைப் பதிவேற்றலாம்.
- பயணத்திற்கான வீடியோ காட்சிகளை நான் எவ்வாறு சமர்ப்பிக்கலாம்?
Down Small Uber ஆப் மூலம் செய்யப்பட்ட ஆடியோ ரெக்கார்டிங்குகளை முகவர்களால் மதிப்பாய்வு செய்ய முடியும். இங்கு நீங்கள் மதிப்பாய்வைக் கோரத் தேர்வுசெய்து, வீடியோ மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்குகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தொடர்புடைய துணைத் தகவல்களைப் பதிவேற்றலாம்.
- கணக்கு மதிப்பாய்விற்கு எவ்வளவு காலம் ஆகும்?
Down Small மதிப்பாய்வு நேரம் ஒவ ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வேறுபடலாம். ஓட்டுநர் மதிப்பாய்வு கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், எதிர்பார்க்கப்படும் செயலாக்க நேரம் மற்றும் நிலை குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படும். மதிப்பாய்வு நடந்து கொண்டிருக்கும்போது கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
- Uber எப்போதும் வாடிக்கையாளருக்குப் பக்கபலமாக இருக்கிறதா?
Down Small இல்லை. நாங்கள் பிற பயனர்களுக்கு ஆதரவாக இருப்பத ு போல் ஓட்டுநர்கள் உணரக்கூடும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் Uber-ஐப் பயன்படுத்தும் அனைவரும் ஒரே சமூக வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறார்கள். பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது சலுகைகளைப் பெறுவதற்காக எங்கள் தரமதிப்பீடு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு அமைப்புகளை சிலர் துஷ்பிரயோகம் செய்யலாம் என்பது ஒரு நம்ப முடியாத உண்மை. இந்த வாடிக்கையாளர்களை சிறப்பாக அடையாளம் காண்பதற்கும், அவர்களின் குற்றச்சாட்டுகள் கணக்கு செயலிழப்பு முடிவுகளில் கருதப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உதவுவதற்கும் நாங்கள் செயல்முறைகளை அமைத்துள்ளோம்.
கொள்கை மீறல்கள்: கணக்கு அணுகலை இழப்பதற்கான பொதுவான காரணங்களை இந்தப் பக்கம் கோடிட்டுக் காட்டுகிறது, ஆனால், ஓட்டுநர் Uber-உடனான ஒப்பந்தங்களில் ஏதேனும் ஒன்றை மீறினால், அல்லது சமூக வழிகாட்டுதல்கள் உட்பட பொருந்தக்கூடிய ஏதேனும் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறினால், Uber இயங்குதளத்தின் அனைத்து அல்லது பகுதிக்கான அணுகலையும் இழக்க நேரிடும். பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், ஓட்டுநர் சம்பாத்தியமாகப் பெற வேண்டிய எந்தத் தொகையிலிருந்தும் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான சேதங்களைக் கழிக்க, ஈடுசெய்ய அல்லது மீட்டெடுக்க எங்களுக்கு உரிமை உண்டு. முறையற்ற நடத்தை சந்தேகிக்கப்பட்டால், கழிக்கப்படக்கூடிய, ஈடுசெய்யப்படக்கூடிய அல்லது வசூலிக்கப்படக்கூடிய தொகைகளின் எடுத்துக்காட்டுகள், கட்டணம், ஊக்கத்தொகைகள், ரெஃபரல் மதிப்புகள், ஊக்கத்தொகைகள், பயணக் கட்டணங்கள், பயணச் சரிசெய்தல் விலைகள், ரத்துக் கட்டணம், ஊக்கத்தொகைப் பயணக் கட்டணங்கள் மற்றும் இதரக் கட்டணங்கள் ஆகியவை அடங்கும், ஆனால், இவை மட்டுமல்ல.
அறிமுகம்