பாதுகாப்பிற்கான எங்கள் உறுதியளிப்பு
நீங்கள் சுதந்திரமாக நகர்வதையும் முடிந்தவரை உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதையும் உங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்களுடனும் இடங்களுடனும் இணைந்திருப்பதையும் நாங்கள் விரும்புகிறோம். அதனால் தான் நாங்கள், தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் புதிய தரநிலைகளை உருவாக்குவதில் இருந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது வரை பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறோம்.
பாதுகாப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என உஙகள் அனுபவத்தின் படி தெரிவிக்கவும்
ஆப்பினில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்
நீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயண விவரங்களைப் பகிரலாம். உங்கள் பயணத்தின் போது, அதைக் கண்காணிக்கலாம். எங்கள் தொழில்நுட்பம் உங்கள் மனதிற்கு நிம்மதியை உங்கள் விரல்நுனிகளில் அளிக்கிறது.
ஒரு சமதர்மச் சமூகம்
இலட்சக்கணக்கான பயணிகளும் ஓட்டுனர்களும் சமூக வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பைப் பகிர்ந்து கொண்டு, சரியான செயல்களைச் செய்ய ஒவ்வொருவரையும் பொறுப்பாக்குகிறார்கள்.
ஒவ்வொரு தருணத்திலும் உதவி
சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஒரு குழு 24/7மும் இருக்கிறது. ஏதேனும் கேள்விகளோ அல்லது பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் பகலோ இரவோ ஆப்பின் மூலம் அவர்களை தொடர்புகொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான பயணங்களைக் கட்டமைத்தல்
ஏதேனும் கேள்விகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பின் 24/7 உதவியை அழைக்கலாம். நீங்கள் விரும்புபவர்களுடன் உங்கள் பயணத்தைப் பகிரலாம். எங்களுடைய கவனம் உங்களுடைய பாதுகாப்பில் உள்ளது, ஆதலால் நீங்கள் வாய்ப்பு இருக்கும் எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
இலட்சக்கணக்கான பயணங்கள் தினமும் கோரப்படுகின்றன. ஒவ்வொரு பயணிக்கும் ஆப்-இன் உள்ளே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கான அணுகல் உள்ளது. உங்களுக்குத் தேவைப்படும்போது உதவ ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு சேவைக் குழு உண்டு.
“ஒவ்வொரு நாளும், உலகம் முழுதும் நகரங்களில் பல லட்சக்கணக்கான மக்களை நமது தொழில்நுட்பம் கார்களின் மூலம் கொண்டு சேர்க்கிறது. மக்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு, நாங்கள் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.”
டாரா கோஸ்சுராவ்சஹி, Uber தலைமை நிர்வாகி
மாற்றத்தை ஏற்படுத்த பார்ட்னர் ஆகுங்கள்
பாதுகாப்பிற்கான எங்களது உறுதியளிப்பு உங்கள் பயணத்தை விட முக்கியமானது. நாங்கள் மக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் முதல் வன்முறைத் தடுப்பு இயக்கங்கள் வரை உள்ள முன்னணி நிபுணர்களுடன் சேர்ந்து சாலைகள் மற்றும் நகரங்களைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவுகிறோம்.
நீங்கள் விரும்பும் இடத்திற்கு விரும்பும் நேரத்தில் தைரியமாக ஓட்டலாம்.
*சில தேவைகளும் அம்சங்களும் பிராந்தியத்தின் அடிப்படையில் வேறுபடலாம் மற்றும் அவை கிடைக்கப்பெறாமல் கூட இருக்கலாம்.